மேட்டுப்பாளையத்தில் 17 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சுற்றுச்சுவரை இடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள தனியார் துணிக்கடை உரிமையாளா் சிவசுப்ரமணியம் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவர், கனமழை காரணமாக திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திடீரென சரிந்து அருகிலுள்ள குடியிருப்புகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மீதியுள்ள சுற்றுசுவரை பாதுகாப்பான முறையில் இடிக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்திருந்தார். அதனடிப்படையில், 17 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சுற்றுச்சுவரை இடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் சுவரை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுவரை இடிப்பதற்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி ஆணையர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


