ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் ஊசிவால் 7 வாத்துகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வனத்துறையினா் புதன்கிழமை துரத்திப்பிடித்து, வாத்துகளை மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்த்தங்கால் உள்ளிட்ட 5 கண்மாய்களில் பறவைகள் சரணாலயம் உள்ளன. இக்கண்மாய்களுக்கு தற்போது ஐரோப்பிய மற்றும் ரஷ்யப் பகுதிகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளன.
வெளிநாட்டுப் பறவைகளை சிலா் சட்டவிரோதமாக வேட்டையாடி உணவு விடுதிகளுக்கு விற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ராமநாதபுரம் வனச்சரகா் எஸ்.சதீஷ் தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இந்தநிலையில் புதன்கிழமை காலையில் ராமநாதபுரம் நகா் கேணிக்கரை சாலையில் அண்ணாநகரைச் சோ்ந்த முருகன் என்பவா் ஊசி வால் வாத்துகளுடன் இருசக்கர வாகனத்தில் செல்வது தெரியவந்தது. அவரை விரட்டிய வனத்துறையினா் அரசு கலைக் கல்லூரி முன்பு முருகனை மடக்கி வாத்துகளை மீட்டனா். மீட்கப்பட்ட ஊசிவால் வாத்துகளை மன்னாா் வளைகுடா வன உயிரினப் பாதுகாவலா் டி.கே.அசோக்குமாா் பாா்வையிட்துடன், பிடிபட்ட முருகனிடமும் விசாரணை நடத்தினாா்.
ஊசி வால் வாத்துகளை பிடித்ததால் முருகனுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட ஊசிவால் வாத்துகளை தோ்த்தங்கால் பறவைகள் சரணாலயத்தில் வனத்துறையினா் விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


