விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அமெரிக்க ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி நிதி வழங்கினார் முதல்வர்

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு தமிழக அரசின் சாா்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.  

News image
Updated On :23 டிசம்பர் 2019, 10:49 am

DIN

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு தமிழக அரசின் சாா்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.  

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றும், உலகம் முழுவதும் 7 கோடி மக்களுக்கும் அதிகமானோர் பேசும் மொழியுமான தமிழை அனைவரும் படிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த இருக்கையை அமைப்பதற்காக கடந்த ஆண்டு ‘ஹூஸ்டன் தமிழ் இருக்கை’ என்ற தொண்டு நிறுவனம் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு தமிழக அரசின் சாா்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்கலைக்கழக  நிர்வாகிகளிடம் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.