போடி மலை கிராமத்திற்கு குதிரை மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்
போடி அருகே உள்ள மலைக் கிராமத்திற்கு ஞாயிற்றுக் கிழமை குதிரை மூலம் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.


தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மலைக் கிராமத்திற்கு ஞாயிற்றுக் கிழமை குதிரை மூலம் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.
இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நாளை(டிச.30) நடைபெற இருக்கிறது. தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொட்டகுடி-271, குரங்கணி 534, கொழுக்குமலை 145, காரிப்பட்டி 150, சென்ட்ரல் ஸ்டேசன் 149, டாப் ஸ்டேசன் 149, அகமலை 666, ஊரடி - 236,-ஊத்துக்காடு 228, கண்ணக்கரை 203 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த மலை கிராமங்களுக்கு வாக்குப் பெட்டிகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் போடி அருகே உள்ள சென்ட்ரல் ஸ்டேசன், ஊத்துக்காடு ஆகிய மலை கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாது. சென்ட்ரல் ஸ்டேசன் வாக்குச்சாவடியில் 149 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

சென்ட்ரல் ஸ்டேசன் மலை கிராம வாக்குச்சாவடிக்கான வாக்குப் பெட்டிகள் குரங்கணி மலை கிராமத்திற்கு லாரி மூலம் கொண்டுவரப்பட்டு பின்னர் குதிரை மூலம் சென்ட்ரல் ஸ்டேசன் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது. இப்பகுதி நக்சல் தடுப்பு பிரிவு போலீஸாரின் கண்காணிப்பில் உள்ளதால் பலத்த பாதுகாப்புடன் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரத்துடன் துப்பாக்கி ஏந்திய போலீஸார் உடன் சென்றனர்.
போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாமரை கண்ணன் தலைமையில் போலீஸார் குரங்கணி பகுதியில் வாக்குச்சாவடிகளை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தமிழக கேரள எல்லைப்பகுதியில் உள்ள போடிமெட்டு மலைக் கிராமத்திற்கு ஜீப் மூலம் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் தமிழக கேரள எல்லையில் உள்ள டாப்-ஸ்டேசன், கொழுக்குமலை ஆகிய மலை கிராமங்களுக்கு கேரளம் வழியாக வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் ஜீப் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...