இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருவோணம் ஊராட்சியில் வாக்காளர்கள் செருப்பால் அடித்து சண்டை போட்டதால் பரபரப்பு

திருவோணம் ஊராட்சி ஒன்றியம் சிவ விடுதி வாக்குச்சாவடியில் ஓட்டு போடும்போது வாக்காளர்கள் செருப்பால் அடித்துக் கொண்டு உருண்டு சண்டை போட்டதால் அப்பகுதி பரபரப்பானது. 

News image
Updated On :30 டிசம்பர் 2019, 9:01 am

DIN

திருவோணம் ஊராட்சி ஒன்றியம் சிவ விடுதி வாக்குச்சாவடியில் ஓட்டு போடும்போது வாக்காளர்கள் செருப்பால் அடித்துக் கொண்டு உருண்டு சண்டை போட்டதால் அப்பகுதி பரபரப்பானது. 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவ விடுதி வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியபோது, வாக்குச்சாவடியில் வாக்களித்து கொண்டிருந்த சாமி அய்யா என்பவருக்கும், ஏஜென்டாக அங்கு அமர்ந்திருந்த திருமூர்த்தி என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு செருப்பால் அடித்துக் கொண்டு வாக்குச்சாவடிக்கு உள்ளேயே உருண்டனர்.

இந்த சம்பவத்தால் தேர்தல் நடத்திக்கொண்டிருந்த தேர்தல் அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வாக்குச்சாவடிக்கு உள்ளேயே செருப்படி சண்டை நடத்தி கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர. இதனால் அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.