கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பா.ம.க. பொது நிழல் நிதிநிலை அறிக்கை: 6-ஆம் தேதியன்று ராமதாஸ் வெளியிடுகிறார்

ஆண்டுதோறும் பா.ம.க. வெளியிடும் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை, வரும் 6-ஆம் தேதியன்று ராமதாஸ் வெளியிடுவார் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:03 am

DIN

சென்னை: ஆண்டுதோறும் பா.ம.க. வெளியிடும் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை, வரும் 6-ஆம் தேதியன்று ராமதாஸ் வெளியிடுவார் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி திங்களன்று வெளியிட்டுள்ள அறி க்கையில் தெரிவித்துள்ளதாவது:

பாட்டாளி மக்கள் கட்சி  கடந்த 2003-04 ஆம் ஆண்டு முதல் பொது நிழல் நிதிநிலை அறிக்கைகளை  மக்கள் மன்றத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 16 நிழல் நிதிநிலை அறிக்கைகள் வெளியிடப் பட்டுள்ள நிலையில், 2019-20 ஆம் ஆண்டுக்கான, 17-ஆவது பொது நிழல் நிதிநிலை அறிக்கை நாளை மறுநாள் 6-ஆம் தேதி புதன்கிழமை வெளியிடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை தியாகராயர் நகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் நாளை மறுநாள் புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்து கொண்டு பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடவுள்ளார். வழக்கம்போலவே தமிழ்நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்புப் பெருக்கம், வேளாண்மை, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு பெருக்கம்,  வறுமை ஒழிப்பு, பெண் குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அற்புதமான ஆலோசனைகள் நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.