பராமரிப்புப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட சேலம் - கரூர் பயணிகள் ரயில் சேவை மீண்டும் வெள்ளிக்கிழமை (பிப். 15) முதல் இயக்கப்பட உள்ளது.
வண்டி எண்: 56015, 56108 சேலம் - கரூர் பயணிகள் ரயில் சேவை பராமரிப்புப் பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் பிப். 15-ஆம் தேதி முதல் இந்த ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது.
அந்த வகையில், வண்டி எண்: 56105-சேலம்-கரூர் ரயில், சேலம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.04 மணிக்குப் புறப்பட்டு காலை 8.15 மணிக்கு கரூர் சென்றடையும். இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமையைத் தவிர்த்து அனைத்து நாள்களிலும் இயங்கும்.
வண்டி எண்: 56106-கரூர்-சேலம் ரயில், கரூரில் இருந்து காலை 8.35 மணிக்குப் புறப்பட்டு, காலை 10.45 மணிக்கு சேலம் வந்தடையும். வண்டி எண்: 56107-சேலம்-கரூர் ரயில், சேலம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 7.30 மணிக்கு கரூர் சென்றடையும். வண்டி எண்: 56108-கரூர்-சேலம் ரயில், கரூரில் இருந்து இரவு 7.50 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9.50 மணிக்கு சேலம் வந்தடையும். ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அனைத்து நாள்களும் இந்த ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூரில் களமிறங்கும் கோப்ரா கமாண்டோக்கள்: மத்திய அரசு அதிரடி
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு: இன்றுமுதல் அமல்

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித் துறையுடன் மோதல் இல்லை: சட்ட அமைச்சா்

காஞ்சிபுரம் அருகே குடிநீா் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


