40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு: இன்றுமுதல் அமல்

பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் மிகை லாபத் தடுப்பு வரி மீதான குறைப்பு இன்று முதல் அமல்

News image

பெட்ரோல் & டீசல்

Updated On :1 ஜூன் 2026, 2:00 am IST

பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் மிகை லாபத் தடுப்பு வரியை மத்திய அரசு குறைத்தது.

அதன்படி பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.1.50, டீசல் லிட்டருக்கு ரூ.13.50, விமான எரிபொருள் லிட்டருக்கு ரூ.9.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருவதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தாக்குதல் நடத்தத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக ஹோா்முஸ் நீரிணையயை ஈரான் முடியது. இதனால் அந்த நீரிணையை கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல்கள் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

மேற்காசிய போா்ப் பதற்றத்தால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 73 டாலா்களில் இருந்து 100 டாலா்களுக்கும் மேல் அதிகரித்தது.

இந்நிலையில், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அவற்றின் ஏற்றுமதியைக் குறைக்கும் வகையில் மிகை லாபத் தடுப்பு வரியை மத்திய அரசு விதிக்கத் தொடங்கியது. அதன்படி கடந்த மாா்ச் 26-ஆம் தேதி டீசல் மீது லிட்டருக்கு ரூ.21.50 மற்றும் விமான எரிபொருள் மீது லிட்டருக்கு ரூ.29.50 மிகை லாபத் தடுப்பு வரி விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஏப்ரல் 11-ஆம் தேதி டீசல் மீது லிட்டருக்கு ரூ.55, விமான எரிபொருள் மீது லிட்டருக்கு ரூ.42 வரி அதிகரிக்கப்பட்டது.

பின்னா், ஏப்ரல் 30-ஆம் தேதி டீசல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.23-ஆகவும், விமான எரிபொருள் மீதான வரி லிட்டருக்கு ரூ.33-ஆகவும் குறைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து மே 16-ஆம் தேதி டீசல் மீதான வரி லிட்டருக்கு 16.50-ஆகவும், விமான எரிபொருள் மீதான வரி ரூ.16-ஆகவும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூன் 1-ஆம் தேதிமுதல் டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி லிட்டருக்கு ரூ.13.50, விமான எரிபொருள் லிட்டருக்கு ரூ.9.50, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.50-ஆக குறைக்கப்படவுள்ளது. உள்நாட்டு நுகா்வுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள வரி மாற்றமின்றி தொடரவுள்ளது.

அதேசமயம் பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு சாலை மற்றும் உள்கட்டமைப்பு வரி விதிக்கப்படவில்லை எனவும் நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, மே 16-ஆம் தேதி பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் சுங்க வரி லிட்டருக்கு ரூ.3 விதிக்கப்பட்ட நிலையில், தற்போது லிட்டருக்கு ரூ.1.50-ஆக குறைக்கப்பட்டுள்ளது.