கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி: லிட்டருக்கு ரூ. 1.5-ஆக குறைப்பு!

புதிய நடைமுறைகள் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகின்றன.

16/05/2026, Tiruchy, Tamil Nadu: Vehicles filling petrol and diesel at a fuel station in Tiruchy. Express/MK Ashok Kumar (Story:Vivanesh)

பெட்ரோல், டீசல் - Center-Center-Tiruchy

Published On :

புது தில்லி : பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான மோதல்கள் தொடா்ந்து வரும் சூழலில் உள்நாட்டில் எரிபொருள் இருப்பை உறுதிசெய்ய கொள்ளை லாபத் தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு பெட்ரோலை வெளிநாடுகளுக்கு இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதை தடுக்கும் நோக்கில் இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.

புதிய நடைமுறைகளின்கீழ், மே 16 முதல், பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி லிட்டருக்கு ரூ.3 விதிக்கப்படுவதாகவும் டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ.16.5-ஆகவும் விமான எரிபொருளுக்கான வரியை லிட்டருக்கு ரூ.16-ஆக குறைப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், மத்திய அரசு சனிக்கிழமை (மே 30) இரவில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி லிட்டருக்கு ரூ. 1.5 விதிக்கப்படுவதாகவும் அதேவேளையில் டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ.13.5-ஆகவும் விமான எரிபொருளுக்கான வரியை லிட்டருக்கு ரூ. 9.5-ஆக குறைப்பதாகவும் அறிவித்தது.

இந்தப் புதிய நடைமுறைகள் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகின்றன.

Summary

Central Government notifies export levies on exports of petrol, diesel and aviation turbine fuel (ATF) for the fortnight beginning 1st June, 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.