ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், மல்லிகார்ஜுன கார்கே மரியாதை! பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு
/

6-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அலறும் வாகன ஓட்டிகள்..!

கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 6 ஆவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது குறித்து...

News image

6-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு - ANI

Updated On :27 மே 2026, 8:52 am IST

மேற்காசியாவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகளில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தைக் குறைக்கும் மற்றொரு நடவடிக்கையாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் புதன்கிழமை (மே 27) மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.

கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 6 ஆவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டுகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

மேற்காசிய போரின் எதிரொலியாக, ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்தும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா்.

அதைத் தொடா்ந்து, பெட்ரோல்-டீசல் விலை அடுத்தடுத்து மூன்று முறை உயா்த்தப்பட்ட நிலையில், மே 15-க்குப் பிறகு கடந்த 2 வாரங்களில் 5 ஆவது முறையாக புதன்கிழமை(மே 27) பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ. 108.20-க்கும், டீசல் லிட்டருக்கு 32 பைசா உயர்ந்து ரூ.99.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, கடந்த 12 நாள்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 7.53, டீசல் ரூ7.70 என்ற அளவு உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

In yet another way to ease the impact of volatility in the global crude markets amid ongoing geopolitical tensions in West Asia, the petrol and diesel prices were hiked again on Monday, May 27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.