பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது, நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சி என்று காங்கிரஸ் எம்.பி. ராஜிவ் சுக்லா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக உலகளவில் எரிவாயு விநியோகம் அதிகமாக பாதிப்படைந்துள்ளது. இதனால், கடந்த பத்து நாள்களில் மட்டும் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
இது குறித்து பேசிய, ராஜிவ் சுக்லா, “இது நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியாகும். பெட்ரோல், டீசல் விலை உயரும்போது, பணவீக்கம் எல்லாவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பொதுமக்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
நமது தவறான வெளியுறவுக் கொள்கையின் காரணமாக, இன்று பெட்ரோல், டீசல் விலை இவ்வளவு உயர்ந்து வருகிறது. இதுவரை ஒரு லிட்டருக்கு சுமார் ரூ. 5 அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவு ரூபாய் உயரும் என்பது தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி, 51,000 இளைஞர்களுக்கு இன்று பணிநியமன ஆணையை வழங்கியது குறித்து பேசிய ராஜிவ் சுக்லா, ”நாட்டில் மொத்தம் 22 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக நான் நம்புகிறேன். 51,000 இளைஞர்களுக்கு மட்டும் நியமனை ஆணைகளை வழங்கினால், என்ன செய்வது? எனவே, இதெல்லாம் போதாது” எனக் கூறினார்.
Summary
Congress MP Rajiv Shukla stated on Saturday that the hike in petrol and diesel prices has come as a massive shock to the people of the country.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









