தமிழக காவல்துறையில் 61 காவல் துணைக் கண்காணிப்பாளர்களைப் (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி முதல் கட்டமாக தமிழக காவல்துறையில் 61 காவல் துணைக் கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 26 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
முக்கியமாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த வி.ராமலிங்கம் திருப்பரங்குன்றத்துக்கும், ஆர்.சித்திரைவேலு நாகப்பட்டினம் சமூக நீதி மற்றும் மனித உரிமைத்துறைக்கும், எஸ்.வெங்கடேசன் நாகப்பட்டினம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவுக்கும், கே.தங்க வேலு மதுரை மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்துக்கும், டி.விஜயகுமார் மதுரை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கும், கே.சங்கர் திருவாரூர் மத்தியக் குற்றப்பிரிவுக்கும், எஸ்.ராஜகுமார் தருமபுரி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! - முதல்வர் விஜய் உத்தரவு

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!

தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை!

பயிர்க் கடன் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


