திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா 4-ஆம் நாளான புதன்கிழமை இரவு சுவாமி குமரவிடங்கப் பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா வந்தனர்.
இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலையும் மாலையும் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது.
4ஆம் நாளான புதன்கிழமை காலை தங்க முத்துக்கிடா வாகனத்தில் சுவாமியும், வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மனும் வீதியுலா வந்தனர். மாலையில் மேலக்கோயிலிலிருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியருளினர்.
5ஆம் நாளான வியாழக்கிழமை (பிப். 14) இரவு 7.30 மணியளவில் மேலக்கோயிலில் வைத்து, சுவாமி - அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி குடவருவாயில் தீபாராதனையாகி, வீதியுலா வருதல் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா. பாரதி, கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! - முதல்வர் விஜய் உத்தரவு

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


