ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

சேலம்-கரூர் பயணிகள் ரயில் நாளை முதல் மீண்டும் இயக்கம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட சேலம் - கரூர் பயணிகள் ரயில் சேவை மீண்டும் வெள்ளிக்கிழமை (பிப். 15) முதல் இயக்கப்பட உள்ளது.

Updated On :14 பிப்ரவரி 2019, 1:26 am IST


பராமரிப்புப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட சேலம் - கரூர் பயணிகள் ரயில் சேவை மீண்டும் வெள்ளிக்கிழமை (பிப். 15) முதல் இயக்கப்பட உள்ளது.
வண்டி எண்: 56015, 56108 சேலம் - கரூர் பயணிகள் ரயில் சேவை பராமரிப்புப் பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில்,  வரும் பிப். 15-ஆம் தேதி முதல் இந்த ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது.
அந்த வகையில், வண்டி எண்: 56105-சேலம்-கரூர் ரயில்,  சேலம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.04 மணிக்குப் புறப்பட்டு காலை 8.15 மணிக்கு கரூர் சென்றடையும்.  இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமையைத் தவிர்த்து அனைத்து நாள்களிலும் இயங்கும்.
 வண்டி எண்: 56106-கரூர்-சேலம் ரயில்,  கரூரில் இருந்து காலை 8.35 மணிக்குப் புறப்பட்டு,  காலை 10.45 மணிக்கு சேலம் வந்தடையும்.  வண்டி எண்: 56107-சேலம்-கரூர் ரயில், சேலம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு,  இரவு 7.30 மணிக்கு கரூர் சென்றடையும்.  வண்டி எண்: 56108-கரூர்-சேலம் ரயில், கரூரில் இருந்து இரவு 7.50 மணிக்குப் புறப்பட்டு,  இரவு 9.50 மணிக்கு சேலம் வந்தடையும்.  ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அனைத்து நாள்களும் இந்த ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.