திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தமிழக காவல்துறையில் 61 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 61 காவல் துணைக் கண்காணிப்பாளர்களைப் (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க. ராஜேந்திரன்

Updated On :14 பிப்ரவரி 2019, 2:51 am IST


தமிழக காவல்துறையில் 61 காவல் துணைக் கண்காணிப்பாளர்களைப் (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி  முதல் கட்டமாக தமிழக காவல்துறையில் 61 காவல் துணைக் கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 26 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர். 
முக்கியமாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த வி.ராமலிங்கம் திருப்பரங்குன்றத்துக்கும், ஆர்.சித்திரைவேலு நாகப்பட்டினம் சமூக நீதி மற்றும் மனித உரிமைத்துறைக்கும், எஸ்.வெங்கடேசன் நாகப்பட்டினம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவுக்கும், கே.தங்க வேலு மதுரை மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்துக்கும்,  டி.விஜயகுமார் மதுரை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கும்,  கே.சங்கர் திருவாரூர் மத்தியக் குற்றப்பிரிவுக்கும், எஸ்.ராஜகுமார் தருமபுரி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.