நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நாகூர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா: நாளை சந்தனக் கூடு ஊர்வலம்

நாகூர் ஆண்டவர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் வெள்ளிக்கிழமை (பிப். 14) நடைபெறுகிறது.

News image

 நாகூர் தர்காவில் நடைபெற்ற சந்தனம் அரைக்கும் பணி. 

Updated On :14 பிப்ரவரி 2019, 1:30 am IST


நாகூர் ஆண்டவர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் வெள்ளிக்கிழமை (பிப். 14) நடைபெறுகிறது.
ஆன்மிக மகிமைகளால் உலகப் புகழ் பெற்ற தர்காக்களுள் ஒன்றாகவும், மதங்களைக் கடந்து மனிதம் போற்றும் வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது நாகூர் ஆண்டவர் தர்கா. இந்த தர்காவின் கந்தூரி விழாவில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம். 
இதன்படி, நாகூர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா, பிப். 6-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் வெள்ளிக்கிழமை மாலை நாகையிலிருந்து தொடங்கி நடைபெறவுள்ளது. சந்தனக் கூடு ஊர்வலத்தின் நிறைவில், சனிக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் நாகூர் ஹஜரத்து ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையொட்டி, சந்தனக் கூடு அலங்கார அமைப்பின் தயாரிப்புப் பணிகள் நாகையில் நடைபெற்று வருகிறது. நாகூர் ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கான சந்தனம் அரைக்கும் பணி நாகூரில் நடைபெற்று வருகிறது. 
தமிழக அரசு சார்பில், வனத் துறை மூலம் அளிக்கப்பட்ட 20 கிலோ சந்தனக் கட்டைகளைக் கொண்டு, சந்தனம் தயாரிக்கப்படுகிறது. சந்தனக் கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் விழாவில் திராளானோர் பங்கேற்பர் என்பதையொட்டி, தர்கா நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு விரிவான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.