கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

கடந்த சில தினங்களாக சிறிதளவிலான மாற்றங்களை கண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:08 am

DIN


கடந்த சில தினங்களாக சிறிதளவிலான மாற்றங்களை கண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எரிபொருள் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்தது.

சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.87-க்கும் மேல் அதிகரித்தது. டீசலும் ரூ.80-ஐ எட்டியது.

இந்தச் சூழலில், கச்சா எண்ணெயின் விலையில் காணப்பட்ட சரிவு காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.16 வரையிலும், டீசல் ரூ.14 வரையிலும்  குறைந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை அளித்தது.

இந்த நிலையில், சர்வதேச சந்தையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமன்றி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சற்று சரிவடைந்து வந்தது. அதன் தாக்கம் பெட்ரோலியப் பொருள்களின் விலையில் எதிரொலித்தது. பின்னர், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலையில் சிறிதளவில் குறைந்தும், மாற்றங்களின்றியும் இருந்து வந்தது. 

இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.06 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 69.37 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.