அ.தி.மு.க அரசின் இந்த இமாலய ஊழல் 2012 முதல் 2016ஆம் ஆண்டிற்குள் நடைபெற்றதாக வீடியோ கான்ஃபரன்ஸ் ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. "வெளிநாடுகளில் ஊழல் செய்வதைத் தடுக்கும்" அமெரிக்க சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட இந்த வழக்கு, அ.தி.மு.க ஆட்சியின் "கமிஷன் கரெப்ஷன், கலெக்ஷன்" என்ற ஊழல் ஆட்சியின் முகத்தை தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டிலிருந்து சென்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் வெளிப்படுத்தியிருக்கிறது. சதுர அடிக்கு இவ்வளவு என ரேட் நிர்ணயித்து கட்டிட அனுமதி வழங்குவதற்கு அ.தி.மு.க ஆட்சி நடத்தும் கொள்ளை சென்னையிலும், தமிழகத்திலும், இந்தியாவிலும் ஏற்கனவே தெரிந்திருந்த நிலையில், இப்போது இறக்கை கட்டிப் பறந்து சென்று அமெரிக்காவிலும் ஆதாரபூர்வமான ஊழல் வழக்கு ஒன்றின் மூலம் தெரிய வந்திருப்பது கேடுகெட்ட இந்த அ.தி.மு.க ஆட்சியால், இங்குள்ள தமிழர்களுக்கும், அமெரிக்காவில் உள்ள தமிழர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது.