சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற குறும்படத்தில் நடித்துள்ள கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்கர் விருதுகளில் `period. end of sentence' குறும்படத்திற்கு விருது கிடைத்திருக்கிறது. இந்த குறும்படத்தில் கடந்த பல வருடங்களாகக் குறைந்த விலையில் பெண்களுக்கான நாப்கின்களைத் தயாரித்து வரும் கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் நடித்துள்ளார். இவரைப்பற்றிய ஆவணப் படங்கள் இதுவரை நிறைய வந்துள்ளன.
இந்நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற குறும்படத்தில் நடித்துள்ள கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
#PeriodEndOfSentence ஆஸ்கர் விருது பெற்றிருப்பது பெருமைக்குரிய செய்தி.
எளிய மக்கள், குறிப்பாக மகளிர் மீது அக்கறை கொண்டு செயலாற்றியத் தமிழர் அருணாசலம் முருகானந்தம் அவர்களுக்கும் அந்தத் தமிழருடைய சாதனையை உலகளவிற்குக் கொண்டு சென்ற படக்குழுவினருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அனுமதியின்றி மணல் அள்ளியவா் மீது வழக்கு

பழனியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது
சரக்கு வாகனம் மீது லாரி மோதியதில் இரு பெண்கள் உயிரிழப்பு; 15 போ் பலத்த காயம்
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

