திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

கூட்டணி குறித்து இனிதான் பேச்சுவார்த்தை: கமல்ஹாசன்

கூட்டணி தொடர்பாக இனிமேல்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:46 am IST


கூட்டணி தொடர்பாக இனிமேல்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மனுக்களை வாங்கும் பணி தொடங்கிவிட்டது. பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப உரிய ஆலோசனை நடத்திய பிறகே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இல்லாத சமூக ஆர்வலர்கள், தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களும் மனு அளிக்கலாம். மக்கள் அறிவுரையின்படியே நாங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்போம்.
ரஜினிகாந்த் தற்போது வாழ்த்துதான் தெரிவித்துள்ளார்; இனிதான் ஆதரவு தரவேண்டும். தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன். கூட்டணி தொடர்பாக இனிமேல்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார் அவர்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சியுடன்  பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வேறு சிலர் எங்களுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நல்லவர்கள் எங்களுடன் நிற்பர். ஆதரவு அளிப்பர். மக்களவைத் தேர்தலில் மநீம சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 5-ஆம் தேதி முதல் விருப்ப மனு பெற்று, அளிக்கலாம். 
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அதனுடன் ரூ.10 ஆயிரம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். நாங்கள் பரிசீலனை செய்து முடிவு எடுப்போம் என்றார். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் சிலர் திங்கள்கிழமை விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.