தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும்? என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, இதுகுறித்து டாஸ்மாக் தலைவர் நேரில் ஆஜராகி விளமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்திற்கு 100 மீட்டருக்குள் கோயிலோ, கல்வி நிறுவனங்களோ உள்ள இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்ற விதிமுறைகளை மீறி தஞ்சாவூர் பள்ளிக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில், தஞ்சாவூர் பள்ளிக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் தமிழக உள்துரை செயலாளர், டாஸ்மாக் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரை எதிர்மனுதாரராக சேர்த்து விட்டதுடன், தமிழகத்தில் 2016 இல் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன? பின்னர் எத்தனை கடைகள், எத்தனை கட்டங்களாக மூடப்பட்டன, அதில் கிடைக்கப்பெற்ற வருமானங்கள் எவ்வளவு என்ற விவரகங்களை மாவட்ட வாரியாக அறிக்கை தரவேண்டும் என்றும், பின்னர் புதிய கடைகள் எத்தனை திறக்கப்பட உள்ளன? தமிழகத்தில் முழுவதுமாக டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும்? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், டாஸ்மாக் தலைவர் மார் 4 ஆம் தேதி நேரில் அஜராகி விளக்கமளிக்க வேண்டும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரிப்பு: உரிமையாளா் மீது வழக்கு

ஆலங்குளம் நல் மேய்ப்பா் ஆலயத்தில் 29-வது பிரதிஷ்டை பண்டிகை!
இன்றைய ராசி பலன் (18.05.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (18.05.2026) - மிதுனம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

