மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மக்களவைத் தேர்தல்: திமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On :26 பிப்ரவரி 2019, 1:43 am IST


மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு, புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதர கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் திங்கள்கிழமை (பிப்.25) முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டன. இதில், கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்பட 90-க்கும் மேற் பட்டோர் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.மார்ச் 7-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களைக் கட்சித் தலைமையிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில்,கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருந்தால், அதற்காக செலுத்திய கட்டணத் தொகை திருப்பித் தரப்படும் எனவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.