ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

இனிவரும் காலங்களில் தமிழகத்தில் மின்வெட்டுக்கு இடமில்லை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் இனி வரும் காலங்களில் மின்வெட்டு என்பதற்கு இடமில்லை என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

News image

அரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 

Updated On :26 பிப்ரவரி 2019, 12:53 am IST


தமிழகத்தில் இனி வரும் காலங்களில் மின்வெட்டு என்பதற்கு இடமில்லை என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம்,  அரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசியது : 
2006  முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு பிரச்னைகள் இருந்தன. தி.மு.க. ஆட்சியில் போதிய மின்சாரம் இல்லாததால், தமிழகத்தில் தொழில்கள் முடங்கின. விவசாயப் பணிகள் நலிவடைந்தன.
 தமிழக மக்களின் துன்பங்களை அறிந்த மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா,  தமிழகத்தில் 3 ஆண்டுகளில் மின் வெட்டு பிரச்னைகள் இருக்காது என சட்டப் பேரவையில் உறுதி அளித்தார். அதற்கு பிறகு தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.
தற்போது தமிழகத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  தமிழகத்தில் தொழில் வளமும் பெருகியுள்ளது.  கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியில் கடுமையான விலைவாசி உயர்வு இருந்தது.  ஆனால்,  அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டில் உள்ளது.
  தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின்,  உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது எந்தக் கிராமத்துக்கும் செல்லவில்லை.  தற்போது, கிராமங்கள் தோறும் சென்று ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி,  மக்கள் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். 
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பதவியில் இருக்கும்போது இதுபோன்று மக்களைச் சந்தித்து, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் கண்டிருக்கலாம்.
விவசாயப் பணிகளுக்கு முக்கியத்துவம்: விவசாயிகள்தாம் இந்த நாட்டின் முதுகெலும்பு என்பதால், விவசாயப் பணிகளுக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.  குடிமராமத்துப் பணிகள் மூலம் ஏரிகள் தூர்வாரப்படுகின்றன.  அதேபோல்,  ஆறுகள், ஓடைகளின் குறுக்கே அதிக அளவில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, மழைநீர் சேமிக்கும் பணிகளை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. 
 ஏழை,  எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கிராமப் பகுதிகளில் அதிக அளவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டரும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும். எனவே,  எதிர்வரும் மக்களவைத் தேர்தல்,  21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக தொண்டர்கள், பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். 
இந்தப் பொதுக்கூட்டத்தில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோரஞ்சிதம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.