மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மதுரை, நெல்லை, சிவகங்கை மாவட்டங்களுக்கு தேசிய தண்ணீர் விருது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வழங்கினார்

மதுரை, நெல்லை, சிவகங்கை மாவட்டங்களுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய தண்ணீர் விருதுகளை தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வழங்கினார்.

News image

தேசிய தண்ணீர் விருது வழங்கும் நிகழ்ச்சியில்  மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடமிருந்து (வலமிருந்து) விருது பெறும் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ் .நடராஜன்,  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 

Updated On :26 பிப்ரவரி 2019, 1:33 am IST

மதுரை, நெல்லை, சிவகங்கை மாவட்டங்களுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய தண்ணீர் விருதுகளை தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வழங்கினார்.
நாட்டின் தென் மண்டலத்தில் தமிழகத்தில் மதுரை மாவட்டத்திற்கு நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதலில் சிறந்த மாவட்டத்திற்கான முதல் பரிசும், நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிகளுக்காக மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.
இதேபோல, திருநெல்வேலி மாவட்டத்திற்கு நதி மீட்டெடுத்தல் பணிக்காக மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது. 
சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் நீர்நிலைகள் புனரமைப்பு, புதிதாக உருவாக்குதல் பணிகளுக்காக மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.
இந்த விருதுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ் .நடராஜன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜே. ஜெயகாந்தன், திருநெல்வேலி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் தற்போதைய மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிக்காக சிறந்த குடியிருப்போர் நலச் சங்கமாக சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த ஜெயின்ஸ் கீரின் ஏக்கர் குடியிருப்போர் நலச் சங்கம், சிறந்த நடுத்தர, சிறு தொழில் நிறுவனமாக ஈரோட்டைச் சேர்ந்த கேஜிஎஃப்எல் நிறுவனம், சிறந்த நகராட்சியாக நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கபாடி, மணல்மேடு ஆகிய நகராட்சிகள், சிறந்த கல்வி, பொது மக்கள் விழிப்புணர்வுக்காக கோயம்பத்தூர் ஈஷா பவுண்டேஷன் ஆகியவை தேர்வு செய்யப்பட்டன. 

இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை;நீர் மேலாண்மைதான் போதுமானதாக இல்லை
இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை; ஆனால் நீர் மேலாண்மைதான் போதுமானதாக இல்லை என்று மத்திய நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். தில்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய தண்ணீர் விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது:
கால்வாய் நீர் பாசன திட்டங்களுக்கு பதிலாக குழாய் வழி நீர் பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பாசனத்துக்கான நீர் வீணாவதைத் தடுக்க மத்திய நடவடிக்கை எடுத்து வருகிறது. கும்ப மேளாவில் கங்கை நீர் தொடர் சுத்திகரிப்பு செய்யப்பட்டது. அரசின் இந்த முயற்சிக்கு மக்கள் பாராட்டினார்கள். கங்கையில் டால்பின், ஆமை, பறவைகள் அதிக அளவில் காணப்படுவது கங்கை நீர் தூய்மையடைந்து வருவதைக் காண்பிக்கிறது. இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. ஆனால், நீர் மேலாண்மைதான் போதுமானதாக இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.