ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவாரூர் தொகுதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார்: சசிகலாவை சந்தித்த பின்னர் தினகரன் பேட்டி 

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின்னர் தினகரன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :3 ஜனவரி 2019, 12:57 pm

DIN

பெங்களூரு: திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின்னர் தினகரன் தெரிவித்துள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் தணடனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ராஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வியாழன் அன்று சந்தித்துப் பேசினார். 

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, துரோகிகளுடன் நாங்கள் ஒருபோதும் இணைய மாட்டோம்.  நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, உடன்பாடு ஏற்படாவிட்டால் நாங்கள் தனித்து போட்டியிடுவோம்.

திருவாரூர் தொகுதி வேட்பாளர் குறித்து சசிகலாவுடன் ஆலோசனை செய்யப்பட்டது.  இடைத்தேர்தல் நடத்தினால் தான் மக்கள் யார் பக்கம் என்பது தெரிய வரும் . திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் நாளை தஞ்சாவூரில் அறிவிக்கப்படுவார். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.