முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக் சிலை லண்டனில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
தேனி, மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் பிரிட்டனைச் சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக். இவரது அளப்பரிய சேவையைப் பாராட்டி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் இன்றளவும் பல்வேறு விழாக்கள் எடுத்து நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பென்னிகுயிக் குடும்பத்தினர் கடந்தாண்டு தமிழகம் வந்தனர். அப்போது அவர், பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை, அவரது மணிமண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பார்த்து மகிழ்ந்தனர். இதில் பென்னிகுயிக் குடும்பத்தினர் தேனி,கம்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் செய்திருந்தார்.
இதனால் பென்னிகுயிக் குடும்பத்தினர், விசுவநாதனுடன் நல்ல தொடர்பில் இருந்தனர். தமிழகத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் முன்னர் பென்னிகுயிக் குடும்பத்தினர் லண்டனில் பென்னிகுயிக் கல்லறை அருகே சிலை வைக்க உள்ளதாகவும், அதற்கு ஒரு சிலை செய்து தரும்படியும் விசுவநாதனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அவர்களது வேண்டுகோளை ஏற்ற விசுவநாதன், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிற்பி மூலம் ஈரான் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட விலை உயர்ந்த வெள்ளைக் கல்லில் பென்னிகுயிக்கின் 2 அடி உயர மார்பளவு சிலையைச் செய்தார். இந்தச் சிலை கடந்த செப்டம்பர் மாதம் பென்னிகுயிக் வாழ்ந்த கூடலூர் பகுதியில் இருந்து லண்டன் எடுத்துச் செல்லப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் இந்த சிலை லண்டன் அருகே உள்ள பென்னிகுயிக் சொந்த ஊரான ஃபிரேம்ளி என்ற பகுதிக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு பென்னிகுயிக் கல்லறை உள்ள பூங்காவில், சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் இந்தியத் தூதரக அதிகாரி ஓ.எஸ்.ராஜன்,பென்னி குயிக் சிலையை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சி அங்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பென்னிகுயிக் குடும்பத்தினர், இந்தியத் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக இந்த விழாவுக்கு பிரிட்டன் மகாராணி எலிசபெத் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!

தடுப்புக் காவலில் ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


