அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை தேவையில்லை: ஆணையம் முடிவு? 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது தோழியான சசிகலாவிடம் விசாரணை நடத்தத் தேவையில்லை என்று ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :23 ஜனவரி 2019, 2:06 pm

DIN

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது தோழியான சசிகலாவிடம் விசாரணை நடத்தத் தேவையில்லை என்று ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம்  தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  

இந்த ஆணையத்தின் முன் திங்களன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார்.  மக்களவை துணை சபாநாயகராக தம்பிதுரை எம்.பி.  செவ்வாயன்று ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 

அதேபோல ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் துணை முதல்வர் ஓபிஎஸ் வரும் 29ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக அவர் புதன்கிழமை (23.01.2019) ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி ஓபிஎஸ் கோரி இருந்தார். 

இதுதொடர்பாக அவரது தரப்பில் இருந்து விளக்க கடிதம் ஒன்று ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.  இதனை அடுத்து வருகிற 29ந்தேதி நேரில் ஆஜராகும்படி அவருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது தோழியான சசிகலாவிடம் விசாரணை நடத்தத் தேவையில்லை என்று ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ராஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவிடம் நேரடி விசாரணை தேவை இல்லை என்று, ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையத்தின் வழக்கறிஞர் கூறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.