மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

பாஜக, அதிமுக அரசுகள் வீழ்வது உறுதி: மு.க. ஸ்டாலின்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக, அதிமுக சேர்ந்து வந்தாலும், தனித்து வந்தாலும் அவை வீழ்த்தப்படுவது உறுதி என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

News image

திருச்சியில்புதன்கிழமை நடைபெற்ற தேசம் காப்போம் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் 

Updated On :24 ஜனவரி 2019, 3:06 am IST


வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக, அதிமுக சேர்ந்து வந்தாலும், தனித்து வந்தாலும் அவை வீழ்த்தப்படுவது உறுதி என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேசம் காப்போம் மாநாட்டில் சிறப்புரையாற்றி மு.க. ஸ்டாலின் மேலும் பேசியது:
கொல்கத்தா மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று முழக்கமிட்டனர். அங்கு நான் பேசியபோது, இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போர் தான், வரக்கூடிய தேர்தல். பாஜகவை வீழ்த்தி தனிமைப்படுத்த வேண்டும் என்றேன். பாஜகவால், மோடியால் நாட்டுக்கு ஆபத்து என்பதைச் சுட்டிக்காட்டினேன். 
ரபேல் போர் விமான விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்றால், அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு சலுகைகள் தரட்டும். அதைத் தடுக்கவில்லை, எதிர்க்கவில்லை. ஆனால் அதை இட ஒதுக்கீட்டுக்குள் கொண்டு வந்து, சமூக நீதிக்கு குழிதோண்டுவதுதான் தவறு. 
நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு மோடியை வீழ்த்தும் வேலை மட்டும்தான் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 2 வேலை உள்ளது. மத்திய ஆட்சியோடு சேர்த்து எடப்பாடி பழனிசாமியையும் வீழ்த்த வேண்டியுள்ளது என்றார் ஸ்டாலின்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி: 2019-ம் ஆண்டில் புதிய மாற்று ஆட்சி ஏற்படுத்தப்படும். நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் சமத்துவம் பெற்றால் தான் நாடு முன்னேறும் என்றார் அம்பேத்கர். தேர்தல் வரும்போது புதிய வாக்குறுதிகளுடன் பிரதமர் மோடி மக்களிடம் வருவார். பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். பாஜகவும் அதிமுகவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக உள்ளன. இந்த அரசுகள் அகற்றப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி: நாட்டின் மதச்சார்ப்பின்மை கொள்கையைச் சிதைக்கும் நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு செயல்படுத்துகிறது. தேர்தலின்போது அறிவித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 
குழப்பமான ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் நாடு முழுவதும் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜக மீது மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். 2019-ம் ஆண்டு தேர்தலில் இது எதிரொலிக்கும்.
மதிமுக பொதுச்செயலர் வைகோ: கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுபான்மையின மக்களை ஒழித்துக் கட்டும் வேலையில் பாஜக அரசு ஈடுபடுகிறது. இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்றும் முயற்சி நடக்கிறது. மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கிறது. மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதித்தால், காவிரியில் இனி தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வராது. அதேபோல சோழ மக்களின் நிலத்தை கைப்பற்றி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு கொடுத்து வேளாண் மண்டலங்களை பெட்ரோலிய, ரசாயன முதலீட்டு மண்டலமாக அறிவிப்பதற்கு முயல்கிறது. இதற்காக சுமார் 56 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தை வஞ்சித்து பாலைவனமாக்க முயற்சித்தால், மாநிலத்திலுள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்தும் மாநில அரசுக்கே சொந்தமாகும் என்ற நிலையை அறிவிக்க வேண்டி வரும். 
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கொடிக்குனில் சுரேஷ், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதய் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.