முதலீட்டாளர்களுக்கு விருப்பமான மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாக டிவிஎஸ் நிறுவனத் தலைவர் வேணுசீனிவாசன் தெரிவித்தார். உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் பேசியது:
தமிழக அரசின் சார்பில் தொலைநோக்குத் திட்டம்-2023 வெளியிடப்பட்டது. இதிலுள்ள அம்சங்களை நிறைவேற்றும் வகையில், மாநில அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தொழில் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் முன்னணி மாநிலமாகத் திகழும். தமிழகத்தில் தொழில் திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவிகளை அளித்து வருகிறது. மேக் இன் இந்தியா திட்டம் மூலமாக இந்தியாவை மட்டுமின்றி தமிழகத்தையும் மேம்படுத்தும் பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது.
கடும் போட்டி: தொழில் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதில் இப்போது கடுமையான போட்டிகள் நிலவுகின்றன. குறிப்பாக, ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்கள் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், இந்த மாநிலங்களுக்கெல்லாம் மேலாக, தமிழகம் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பாக, பயணிகள் போக்குவரத்து சேவையை மட்டுமே டி.வி.எஸ். நிறுவனம் மேற்கொண்டு வந்தது. இப்போது, தமிழகத்தில் மட்டும் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்குக் காரணம், தமிழகத்தில் நிலவும் பல்வேறு சாதகமான அம்சங்கள்தான். சட்டம்-ஒழுங்கு பேணிக் காக்கப்படுவது, திறன் வாய்ந்த தொழிலாளர்கள், சட்டத்தை மதிக்கும் தன்மை, ஒழுக்கம் போன்ற பல்வேறு காரணிகளால் அனைத்து தொழில் முதலீட்டாளர்களுக்கும் விருப்பமான மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது.
வறுமை குறைவு: சமுதாய நல்லிணக்கம், மிகக் குறைந்த குற்றச் சம்பவங்கள் நிகழ்வது, குறைந்த அளவிலான வறுமை, தொழிலாளர்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளப்படும் திறன்கள் போன்றவை தமிழகத்தை முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக மாற்றியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராக்கெட் வெடித்து ப்ளூ ஆரிஜின் ஏவுதளம் சேதம்
டிஜியாத்ரா செயலி: 2027-இல் கூடுதலாக 27 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவோம்: இந்தியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



