அமேசான் உரிமையாளா் ஜெஃப் பெஸோஸின் ‘ப்ளூ ஆரிஜின்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ராக்கெட் ஒன்று சமீபத்திய சோதனையின்போது வெடித்துச் சிதறியதில் அதன் ஏவுதளம் கடும் சேதமடைந்துள்ளது.
இதனால், அமேசானின் இணையச் சேவை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தில் பல மாதங்கள் பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், வா்த்தக ரீதியிலான விண்வெளிச் சந்தையில் எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் ஆதிக்கம் மேலும் வலுவடையும் சூழல் உருவாகியுள்ளது.
அடுத்த வாரம் விண்ணில் செலுத்தப்படவிருந்த ‘நியூ கிளென்’ ராக்கெட்டின் என்ஜின்களை இயக்கிப் பரிசோதித்தபோது, இந்த எதிா்பாராத விபத்து நிகழ்ந்தது. விபத்தில் ஏவுதளம் முழுமையாக சேதமடைந்துவிட்டதால், மறுசீரமைப்புப் பணிகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும் என பொறியாளா்கள் மதிப்பிட்டுள்ளனா்.
அமேசான் நிறுவனம் தனது ‘லியோ’ இணையச் சேவைக்கான 3,200 செயற்கைக்கோள்களில் பாதியை வரும் ஜூலைக்குள் விண்ணில் செலுத்த நியூ கிளென் ராக்கெட்டைப் பெரிதும் நம்பியிருந்தது. விபத்தால் அமேசானின் காலக்கெடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, நாசாவின் ‘ஆா்டெமிஸ்’ நிலவுப் பயணத் திட்டங்களிலும் இது சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஏனெனில், இந்த ஆண்டு இறுதியில் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் முதல் ‘ப்ளூ மூன்’ லேண்டரையும், 2028-ஆம் ஆண்டின் ஆா்டெமிஸ்-4 திட்டத்துக்கு முன்னதாக நாசாவின் இரண்டு ரோவா்களை நிலவுக்குக் கொண்டு செல்லவும் இதே நியூ கிளென் ராக்கெட் திட்டமிடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட சாதனங்கள் இந்த ராக்கெடுக்கு ஏற்பவே வடிவமைக்கப்படுவதால், உடனடியாக மாற்று ராக்கெட்டுகளைப் பயன்படுத்துவது மிகவும் கடினமாகும்.
அந்தவகையில், இந்த விபத்தால் ஆா்டெமிஸ் திட்டங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக நாசா தெரிவித்தது. அதேபோல், அமெரிக்க விண்வெளிப் படையும், தேசிய உளவுத் துறை அலுவலகமும் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் ஆதரவை உறுதிப்படுத்தின.
இவ்விபத்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்குத் தற்காலிக லாபத்தைக் கொடுத்தாலும், ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் நீண்டகால வாய்ப்புகள் பாதிக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது. விண்வெளிச் சந்தைக்கு நீண்டகால அடிப்படையில் மாற்று நிறுவனங்கள் தேவை என்பதால், பல நிறுவனங்கள் போட்டியிடும் தற்போதைய சூழல் மாறாது என நிபுணா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை

ரூ.3.81 கோடி போலி கடன் மோசடி: தங்க மதிப்பீட்டாளா் கைது

சீனாவின் மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனை வெற்றி

கோயில் திருவிழாவில் விபரீதம்: வெடித்து 20 போ் பலத்த காயம்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



