பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்ற ராமதாஸ் அத்வாலே கருத்து பாஜகவின் கருத்தல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக - அதிமுக இடையே கூட்டணி ஏற்படும் என மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி என மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, பாஜக கருத்து அல்ல. பாஜகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் கட்சித் தலைமைதான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும்.
தமிழகத்துக்கு நல்லது செய்பவர்களோடு அதிமுக கூட்டணி அமைக்கும், தற்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை. அனைத்துக்கும் அதிமுக ஜால்ரா அடிக்காது. அன்னப்பறவை போல் பிரித்து பார்க்கும்.
மத்திய அரசின் சில திட்டங்களை எதிர்க்கிறோம், சில திட்டங்களை ஆதரிக்கிறோம். பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து தனிப்பட்ட கருத்தே. அது அதிமுகவின் கருத்து அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
27 ஆண்டுகளுக்குப் பின் 'புளூ மைக்ரோ மூன்'! இன்று இரவு தெரியும்!

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகும் பிளாஸ்ட்!

”ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... Vijay துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” | DMDK | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



