மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அத்திவரதர் தரிசனத்திற்கு வந்த ஆந்திர இளைஞர்: போலீஸ் தாக்குதலில் பலியானதாகப் புகார் 

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு வந்திருந்த ஆந்திர இளைஞர் ஒருவர் போலீஸ் தாக்குதலில் பலியானதாகப் புகார் எழுந்துள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2019, 12:15 pm

சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு வந்திருந்த ஆந்திர இளைஞர் ஒருவர் போலீஸ் தாக்குதலில் பலியானதாகப் புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ள இவ்விழாவில் அத்தி வரதரைத் தரிசனம் செய்ய நாடு முடிவதிலுமிருந்து திரளான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தந்தவாறு உள்ளனர். முதல் இரண்டு நாட்களிலும் லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு வந்திருந்த ஆந்திர இளைஞர் ஒருவர் போலீஸ் தாக்குதலில் பலியானதாகப் புகார் எழுந்துள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த சக்தி ஆகாஷ் என்ற இளைஞர் தனது தாயாருடன் கடந்த திங்களன்று காஞ்சிபுரத்திற்கு வந்தார். தரிசனத்தின் பொருட்டு அவர் அங்கு தங்கியிருந்தார்.

புதனன்று கோவிலுக்குச் சென்ற அவர் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்த தங்கப்பல்லியை புகைப்படம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோவில் ஊழியர்கள் கண்டித்ததன் பேரில், பாதுகாப்பிற்கு இருந்த காவலர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த அவர் அப்படியே மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சக்தி ஆகாஷின் தாயரும் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.