மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2015ல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு 

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2015ல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2019, 1:12 pm

சென்னை: நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2015ல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக நடைமுறையில் சட்டங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான மூன்று சட்டப் பிரிவுகளின் நடைமுறையைக் கருத்தில் கொண்டு, 2015-ஆம் ஆண்டு தமிழக அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது.

ஆனால் இந்த சட்டப்பிரிவானது நெடுஞசாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைக்க ஏதுவாக  அமைந்திருப்பதாகவும், இப்பிரிவின் கீழ் நிலம் கையகப்படுத்துவதற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படாமலே  நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்த சட்டத்தை எதிர்த்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் புதனன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றமானது குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.