நேற்று சட்டசபையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதன் முதலில் அனுமதி அளித்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் என்று கூறி, காங்கிரஸ் - தி.மு.க. மீது குற்றம்சாட்டி, பிரச்சினையை திசைதிருப்ப அ.தி.மு.க. அமைச்சர் சி.வி. சண்முகம் கடுமையாக முயற்சி செய்திருக்கிறார். இது முழுபூசனிக்காயை சோற்றில் மறைக்கின்ற முயற்சியாகும். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட நாள் 30 ஜூன் 2015. ஆனால், இந்த நாட்களில் மத்தியில் ஆட்சி செய்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசா ? பா.ஜ.க. அரசா ? என்பதை அமைச்சர் சி.வி. சண்முகம் தெளிவுபடுத்துவாரா ? இந்த அனுமதியை வழங்குகிற வகையில் 24 பரிசோதனை கிணறுகளை தோண்ட திருவாரூர், திருமருகல், குடவாசல், கீவ;ர் பகுதிகளில் அனுமதி அளித்தது மத்திய பா.ஜ.க. அரசு. அதை தடுத்து நிறுத்தாமல், கண்டும் காணாமலும் இருந்தது தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசு.