அடுத்த 2 நாட்கள் யாருக்கெல்லாம் அமோகமாக இருக்கிறது? சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்
அடுத்த இரண்டு நாட்கள் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பான மழை நாளாக அமைந்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.


அடுத்த இரண்டு நாட்கள் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பான மழை நாளாக அமைந்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
வங்கக் கடலின் வடப்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாவதற்கு முன்பு, தமிழகத்துக்கு அடுத்து வரும் 2 நாட்களும் வெப்பச் சலனத்தால் மழை பெய்யும் சிறப்பான நாட்களாகவே தென்படுகிறது.
அடுத்த இரண்டு நாட்களும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இரவில் மழை பெய்யும் நாட்களாக அமைந்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களும் உங்கள் பகுதியில் மழை பெய்தால் மகிழ்ந்திருங்கள்.
வங்கக் கடலின் வடப்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாவது வரைதான், நமது மாவட்டங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தற்போது தென்மேற்குப் பருவ மழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. அடுத்து வரும் இரண்டு நாட்களும், கடற்காற்று தரைப்பகுதிக்கு வந்து, அங்கு வெப்பச் சலனமாக மாறி மழையைத் தருவதற்கான சாதகமான சூழல் உள்ளது.
ஆனால், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிவிட்டால், கடற்காற்று அதன் போக்கில்தான் நகரும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குஜராத் அல்லது பாகிஸ்தான் நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் 26ம் தேதி இரவு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிவிட்டால், அரதன் பிறகு 27ம் தேதி முதல் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைந்துவிடும்.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மழையின் அளவு (மில்லி மீட்டரில்)
சென்னை மரினா - 47
சோழவரம் ஏரி - 43
பெரம்பூர் - 40
அண்ணா பல்கலை- 33
மீனம்பாக்கம் - 25
திருத்தணி - 13 என்ற அளவில் மழை பெய்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...