என் மீதான வெறுப்பை நாட்டின் மீதான வெறுப்பாக மாற்றுகிறார்கள்: மோடி  

என் மீதான வெறுப்பை நாட்டின் மீதான வெறுப்பாக மாற்றுகிறார்கள்: மோடி  

என் மீதான வெறுப்பை நாட்டின் மீதான வெறுப்பாக மாற்றுகிறார்கள் என்று எதிர்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
Published on

கன்னியாகுமரி: என் மீதான வெறுப்பை நாட்டின் மீதான வெறுப்பாக மாற்றுகிறார்கள் என்று எதிர்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரியில் வெள்ளியன்று நடைபெற்ற விழாவில் சுமார் ரூ. 40 ஆயிரம் கோடியிலான பல்வேறு நலத்  திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.நலத்திட்டத் துவக்க விழாவுக்குப் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு என 'ஒரு பதவி ஒரே பென்சன்' திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினோம். ஆனால் இதற்கு முன்னால ஆட்சி செய்தவர்கள் அதுகுறித்து எதுவும் சிந்திக்கவே இல்லை.

2004 முதல் 2014 வரை நாட்டில் பல்வேறு தீவிரவாத மற்றும் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. அவற்றால் உயிர் நீத்த நமது ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்கு காலத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்; சம்பவங்களின் போது, பாகிஸ்தான் மீது 'துல்லிய தாக்குத ல்’ நடத்த ராணுவம் விரும்பியது. ஆனால் காங்கிரஸ் அனுமதிக்கவில்லை.

தற்போது ராணுவத்திற்கு முழுசுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.இது புதிய இந்தியா. நம்மீதான தீவிரவாத தாக்குதலுக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்கப்படும். நாடு வலிமையாக இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது வணக்கங்கள்.

நாடே நமக்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர் மட்டும் ராணுவத்தின் நடவடிக்கை மீது சந்தேகம் எழுப்புகிறார்கள். அவர்களது அறிக்கைகள் நம்மை வருத்தம் கொள்ளச் செய்கின்றன. அவை பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளன. அவை குறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் பேசப்படுகின்றது.அவ்வாறு நடந்து கொள்பவர்கள் தங்களது நிலை என என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

அவர்கள் என் மீதான வெறுப்பை நாட்டின் மீதான வெறுப்பாக மாற்றுகிறார்கள். மோடி இன்று வரலாம்; நாளை போகலாம், ஆனால் தேசம் என்றுமிருக்கும்.உங்ககளது அரசியல் லாபங்களுக்காக நாட்டை பலவீனமாக்காதீர்கள்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com