புது தில்லி: தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதியே இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஞாயிறன்று தில்லியில் வெளியிட்டார்.
அதன்படி நாடு முழுவதும் எழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுசேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதியே இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். பின்னர் நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு அவர்களது தகுதி நீக்கமானது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அந்த 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி மரணமடைந்ததால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே. போஸ் மாரடைப்பால் மரணமடைந்த காரணத்தால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது.
அதேபோல ஓசூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பாலகிருஷ்ணா ரெட்டி, கலவர வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்ற காரணத்தால் உடனடியாக தகுதி இழப்பிற்கு உள்ளனார்.எனவே அந்த தொகுதியும் காலியாக இருப்பதாக சட்டப்பேரவைச் செயலர் அறிவிப்பு வெளியிட்டார்.
எனவே தற்போது இந்த 21 தொகுதிகளும் காலியாக உள்ளன. இவற்றுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் என்பது, சிறிய அளவிலான பெரும்பானமையுடன் இருக்கும் ஆளும் அதிமுக அரசுக்கு அக்னி பரிட்சையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


