மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

செயற்குழு உறுப்பினர் 'திடீர்'  ராஜிநாமா: ஏற்றுக் கொள்வதாக மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு 

கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதியுள்ள செயற்குழு உறுப்பினர் குமாரவேலின் ராஜிநாமாவினை  ஏற்றுக் கொள்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

News image
Updated On :18 மார்ச் 2019, 11:26 am

சென்னை: கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதியுள்ள செயற்குழு உறுப்பினர் குமாரவேலின் ராஜிநாமாவினை  ஏற்றுக் கொள்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், கடலூர் - நாகை பொறுப்பாளரான குமாரவேல் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தியால் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக திங்கள் காலை தகவல்கள் வெளியாகியது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வரும் வேளையில், தான் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக குமாரவேல் தனது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டியிருந்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு கட்சி அவருக்கு கடிதம் அனுப்பியதாகவும், அவரது பதில் திருப்தி தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதியுள்ள செயற்குழு உறுப்பினர் குமாரவேலின் ராஜிநாமாவினை  ஏற்றுக் கொள்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல்

ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.