
சென்னை: மதிமுக பொதுச்செயலாளரான வைகோ இப்படிச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அழகிரியின் மகன் துரை தயாநிதி கிண்டல் செய்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடுகிறது.
அக்கட்சிக்கு ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியும் மாநிலங்களவை சீட் ஒன்றும் அக்கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளரான வைகோ இப்படிச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அழகிரியின் மகன் துரை தயாநிதி கிண்டல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக துரை தயாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் புதன் இரவு வெளியிட்டுள்ள பதிவொன்றில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டின் நம்பகமான அரசியல்வாதியான வைகோ, மதிமுகவை தேர்தலுக்குப் பிறகு திமுகவுடன் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இவ்வாறு பதிவிட்டுள்ள தயாநிதி அழகிரி அதற்கு கீழே ஆமை ஒன்று வீட்டுக்குள் போவது போல படத்தையும் சேர்த்துள்ளார்.
Don’t be surprised if the most credible politician
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.