சென்னை: மதுரை ஆதீனத்தின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது; அதற்கு அவசியமும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆனது, எஸ்.டி.பி.,ஐ கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது பெரும்பாலான இடங்களில் அதிமுகவிற்கு டிடிவியின் அமமுக கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழனன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'டிடிவி.தினகரனை அதிமுகவில் இணைப்பதற்கான பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது; என்னைப் பொறுத்த வரை அது கண்டிப்பாக நடைபெறுமென்று நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது; அதற்கு அவசியமும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


