கோவை: கோவையில் உள்ள வாக்குப் பதிவு எந்திரங்கள் தேனிக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறாரகள்.
கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பதிவு எந்திரங்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோவையில் உள்ள வாக்குப் பதிவு எந்திரங்கள் தேனிக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறாரகள்.
கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியதாக திமுக கூட்டணி கட்சிகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக கூட்டணி கட்சியினரின் போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி அங்கு வருகை தந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டார்.
அதேநேரம் வாக்குப்பதிவு ஆகாத 50 இயந்திரங்களே தேனிக்கு மாற்றபட்டது என்றும், தேர்தல் ஆணையத்தில் இருந்து வந்த கடிதத்தின் அடிப்படையிலேயே இயந்திரங்கள் மாற்றபட்டதாகவும், கோவை வருவாய் அலுவலர் சவுந்தர்ராஜன் தொலைக்காட்சி ஒன்றுக்கு விளக்கமளித்தார்.
இதே விஷயத்தை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹுவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!

காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


