திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கொடைக்கானலில் படகுப் போட்டிகள்: சென்னை சகோதரிகளுக்கு சாம்பியன் பட்டம்

கொடைக்கானலில் 2 நாள்களாக நடைபெற்ற படகுப் போட்டிகளில் பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த சகோதரிகளுக்கு  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்பட்டது.

News image

கொடைக்கானலில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற படகுப் போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற ஸ்ரீலலிதா -உமா சகோதரிகளுக்கு பரிசு வழங்கிய டிஐஜி நிர்மல்குமார்ஜோஷி. உடன்  தலைவர் பவானி சங்கர், கௌரவச் செயல

Updated On :27 மே 2019, 2:58 am IST

கொடைக்கானலில் 2 நாள்களாக நடைபெற்ற படகுப் போட்டிகளில் பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த சகோதரிகளுக்கு  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்பட்டது.
கொடைக்கானல் "போட் அண்ட் ரோயிங் கிளப்' சார்பில் 129-ஆவது படகுப் போட்டி  சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. இப்போட்டியில் சிறுவர், சிறுமியர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர், ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், தட்டைப்படகு, பெடல் படகு என மொத்தம் 24 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் சென்னை, பெங்ளுரூ, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு கௌரவச் செயலர் ராமச்சந்திர துரைராஜா தலைமை வகித்தார். தலைவர் பவானி சங்கர் இரண்டாம் நாள் போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிகளை இர்பான் நடத்தினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில்  விஷால் சுதாகர் முதலிடமும், நாராயணன் இரண்டாமிடமும், அஜய் ராஜ் பிரசன்னா மூன்றாமிடமும் பெற்றனர். சீனியர் கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்ரீலலிதா-விஷால் சுதாகர் முதலிடமும், ஆதித்யாதுரைராஜா -மிந்தமி  இரண்டாமிடமும், வனிஷா சுதாகர்-சுதாகர் ஜெயராஜ் மூன்றாமிடம் பெற்றனர். 
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீ லலிதா (பெங்களுரூ) முதலிடமும், உமா (சென்னை) இரண்டாமிடமும், மிந்தமி (கொடைக்கானல்) மூன்றாமிடமும் பெற்றனர். பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டிகளில் ஸ்ரீ லலிதா-உமா முதலிடமும், மிந்தமி-வனிஷா இரண்டாமிடமும், சந்திரா-ராஷ்மிகா மூன்றாமிடமும் பெற்றனர்.
ஜூனியர் சிறுவர் ஒற்றையர் பிரிவில் நிதின் டேனியல் முதலிடமும், விஷால் மெல்வின் இரண்டாமிடமும்,
கிரன் மூன்றாமிடமும் பெற்றனர். ஜூனியர் சிறுமியர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீ நவ்யா முதலிடமும்,ரித்திகா இரண்டாமிடமும்,அம்ரிதா எஸ்தர் மூன்றாமிடமும் பெற்றனர். இதேபோல, பெடல் படகு சிறுவர் இரட்டையர் பிரிவு, பெரியவர்களுக்கான ஒற்றையர் துடுப்புப் படகு, படகு ஓட்டுநர்களுக்கு இரட்டையர் பிரிவு போட்டிகளிலும் முதல் 3 இடங்களை பெற்றவர்கள் பரிசளிப்புக்காக தேர்வு செய்யப்பட்டனர்.  பெண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சென்னையைச் சேர்ந்த சகோதரிகள் ஸ்ரீலலிதா -உமாஆகியோர் பெற்றனர்.
பரிசளிப்பு விழா: படகுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி படகு குழாம் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டிஐஜி  நிர்மல்குமார் ஜோஷி தலைமை வகித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் படகு குழாம் சங்க நிர்வாகிகள், வீரர், வீராங்கனைகள், சுற்றுலாப் பயணிகள் உள்பட கலந்து 
கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.