தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 14 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 113 டிகிரி வெப்பநிலை பதிவானது.
வேலூரில் 110 டிகிரி, திருச்சியில் 107 டிகிரி, கரூர்பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் தலா 105 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், சேலத்தில் தலா 104 டிகிரி, தருமபுரி, நாமக்கல், பாளையங்கோட்டை, பரங்கிபேட்டையில் தலா 102 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், நாகப்பட்டினம், கடலூரில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரியில் 102 டிகிரி, காரைக்காலில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் உள் தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட உயர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகத்தில் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சில இடங்களில் அனல் காற்று வீசியது. உள்தமிழகத்தில் சில இடங்களில் மே 27, 28 தேதிகளில் வெப்பநிலை வழக்கத்தைவிட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளது
என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



