கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 58-ஆவது மலர் கண்காட்சி மே 30 -ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஆண்டு தோறும் பிரையண்ட் பூங்காவில் நடைபெறுவது வழக்கம். இதற்காக பிரையண்ட் பூங்காவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆந்தோரியம், பேன்சி, டைந்தேஷ், மேரி கோல்ட், கிங் ஆஸ்டர், டேலியா, ரோஜா உள்ளிட்ட 25-வகையான மலர்ச் செடிகள் ஆயிரக்கணக்கில் நடவு செய்யப்பட்டன. தற்போது செடிகளில் ஏராளமான வண்ணமிகு மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும் மலர் பாத்திகள் அமைத்தல், புல் தரைகள் சமப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் கூறியது: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மே 30-ஆம் தேதி மலர் கண்காட்சி தொடங்கப்பட்டு ஜூன் 1-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறும் எனவும் சுற்றுலாத்துறையின் சார்பில் தொடர்ந்து ஜூன் 8-ஆம் தேதி வரை கோடை விழா நடைபெற உள்ளதாகவும் மேலும், விழாவில் பாரம்பரிய, கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவர்கள் மாவட்ட சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், கொடைக்கானல் தொலைபேசி எண் 04542-241675 மற்றும் கைப்பேசி எண்: 9176995867 ஆகிய எண்களிலும் மற்றும் துணை இயக்குனர்(பொ) தோட்டக்கலைத் துறை, கொடைக்கானல் கைப்பேசி எண்: 9500493287 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
மலர் கண்காட்சியை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆயிரக்கணக்கான வெள்ளைப் பூக்களால் வெள்ளை மயில் மற்றும் பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், மேலும் பல வண்ணங்களில் பூந்தொட்டிகள் அமைக்கப்பட உள்ளதாக தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனவா்களுக்கு 5 மாத முதியோா் ஓய்வூதியம் ரூ.13.75 கோடி வங்கியில் செலுத்த ஏற்பாடு: புதுச்சேரி மீன்வளத் துறை நடவடிக்கை

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் அருகே மீனவா்களின் பைக்குகளுக்கு தீ வைப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


