சென்னை புறநகர் பகுதியில் ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம்-ஐ உடைத்து திருட சனிக்கிழமை முயற்சிக்கப்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம்-ஐ உடைத்து திருட சனிக்கிழமை முயற்சிக்கப்பட்டது.
செங்கல்பட்டு அருகே பொத்தேரியில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆய்வு செய்தனர். பின்னா் வழக்குப் பதிந்து அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். இந்நிலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...