தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை!

தொடர் மழை பெய்து வருவதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 நவம்பர் 2019, 7:05 am

DIN

தொடர் மழை பெய்து வருவதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் உள்ள சதுரகிரி கோவில் மலைப்பகுதியில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்களுக்குச் செல்ல அமாவாசை, பெளர்ணமி ஆகிய தினங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். 

அதுமட்டுமின்றி வார இறுதி நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், பிரதோஷ தினம் என்பதாலும், பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருந்தபோதிலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் அனைவரும் மலைக்குக் கீழே உள்ள நுழைவு வாயிலில் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.