திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தமிழகத்தின் 37-ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு உதயம்: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைப்பு

தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை நண்பகல் மணிக்கு தொடக்கி வைத்தார்.

News image
Updated On :29 நவம்பர் 2019, 8:31 am

தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது. இதன் தொடக்க விழா வேண்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு தொடக்கி வைத்தார். மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

துணை முதலமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தலைமையில் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின், வருவாய் நிா்வாக ஆணையா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஆகியோா் முன்னிலை வகித்தனர். 

இவ்விழாவில் தமிழக அமைச்சா்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் ஆட்சியரான ஏ.ஜான்லூயிஸ், அரசு உயா் அதிகாரிகள் உட்பட பலரும் பங்கேற்றனா். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் என 3 வருவாய் கோட்டங்கள் இடம்பெற்றுள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் ஆகிய தாலுகாக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.