ஒருவேளை தேஜாஸ் விரைவு ரயில் தாமதமாக வந்தால் சந்தோஷப்படுங்கள்! ஏன் என்றால்..?

தில்லி - லக்னௌ இடையே இயக்கப்படவிருக்கும் தேஜாஸ் விரைவு ரயில் தாமதமாக வந்தால், அதற்காக ரயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.
தேஜாஸ் விரைவு ரயில் தாமதமாக வந்தால் இழப்பீடு
தேஜாஸ் விரைவு ரயில் தாமதமாக வந்தால் இழப்பீடு
Published on
Updated on
1 min read


தில்லி - லக்னௌ இடையே இயக்கப்படவிருக்கும் தேஜாஸ் விரைவில் ரயில் தாமதமாக வந்தால், அதற்காக ரயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.

அதன்படி, தேஜாஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால், அந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுத்திருந்தவர்களுக்கு ரூ.100ம், இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தால் ரூ.250ம் இழப்பீடாக வழங்கப்படும்.

ரயில் பயணிகளுக்கு ரூ.25 லட்சம் இலவசக் காப்பீட்டுத் திட்டத்துடன், ரயில் தாமதத்துக்கு இழப்பீடு அளிக்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த இலவசக் காப்பீட்டில், பயணிகளின் பொருட்கள் கொள்ளைப் போனால் அதற்கு ரூ.1 லட்சத்துக்கான இழப்பீடும் அடங்கும்.

ஐஆர்சிடிசியின் கீழ் இயங்கும் முதல் ரயில்களாக தில்லி - லக்னௌ மற்றும் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கப்படும் தேஜாஸ் விரைவு ரயில்கள் அமைய உள்ளது. தில்லி - லக்னௌ தேஜாஸ் ரயில் சேவை அக்டோபர் 4ம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com