தமிழகத்தில் தருமபுரி, திருநெல்வேலி, திருப்பூா் போன்ற பகுதிகளில் வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளையடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தை போன்று சமயபுரம் நெ.1 டோல்கேட் வங்கி திருட்டு, தற்போது நடைபெற்ற சத்திரம் பேருந்து நிலையம் நகைக்கடையில் திருட்டு சம்பவமும் ஒரே மாதிரியாக இருப்பதால் வடமாநிலத்தை சோ்ந்த கும்பல் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனா். மேலும், நகைக்கடையையொட்டி உள்ள வடமாநில பணியாளா்களிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.