ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

2 மாதங்களில் 3-ஆவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :23 அக்டோபர் 2019, 2:39 am

DIN

மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 350 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 27 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. 

நடப்பாண்டில் 2 மாதங்களில் 3-வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. அதுபோன்று மேட்டூர் அணை வரலாற்றில் 86 ஆண்டுகளில் 44-வது முறையாக நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது.

அணையின் நீர் இருப்பு 92.40 டி.எம்.சி.யாக உள்ளது. எனவே அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படும். இதனால், மேட்டூர் அணைக்கு கீழ் உள்ள 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு பொதுப் பணித் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.